Wednesday, 24 August 2011

வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்
கலைஞர் தொலைகாட்சி, ராஜ் டிவி, மற்றும் s.s மியூசிக் ஆகிய சேனல்களில்
இரவு 10:30 மணிக்கு தொடங்குகிறது அந்த நிகழ்ச்சி.

பாதி ரஜினி முகத்தையும், பாதி கமல் முகத்தையும் ஒன்று சேர்த்து காட்டுகிறார்கள். அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேள்வி கேட்கிறார். 'திரையில் காட்டப்பட்டிருக்கிற இரு முன்னணி நட்ச்சத்திரங்கள் யார்?' என்பதுதான் அது.
...
இது போதாது என்று இந்த இரு நடிகர்களும் பதினாறு வயதினிலே படத்தில் இணைந்து நடித்த நடிகர்கள் என்ற க்ளூவை வேறு தருகிறார்.

உடனே, யாரோ ஒருவருக்கு லைன் (!) கிடைத்துவிட, அவர் 'கவுண்டமணியும் செந்திலும்' என பதில் சொல்கிறார்.ரஜினியையும், கமலையும் பார்ப்பதற்கு கவுண்டமணியும் செந்திலும் போலவா இருக்கிறார்கள்? என்ன கூத்து இது?

தினமும் இரவு 10:30 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு முடிவடைகிறது. பரிசுத் தொகையோ ரூ.55,000. என்ன நிகழ்ச்சி இது? ஏன் இவர்கள் இந்தப்பணத்தை நமக்குத் தருவதாய் சொல்கிறார்கள்? உண்மையிலேயே கொடுக்கிறார்களா? அவர்களின் நோக்கம் என்ன? இதன் பின்புலம் என்ன? என்பதை விசாரித்தால் சில திடுக்கிடும் உண்மைகள் கிடைத்தன.

இந்த நிகழ்ச்சிகளில். திரையில் காட்டப்படும் உருவங்கள் இலகுவில் கண்டுபிடிக்கக் கூடியதாகவும், உருவங்கள் குறித்து கேட்கப்படும் கேள்விகளும் மிக எளிதானதாகவுமே அமைகின்றன. அதற்குக் காரணம், பார்ப்பவர்கள் உடனே அதற்கான பதிலை தெரிவித்து பரிசைப் பெற்றுவிட வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துவதுதான்.

திரையின் மூலையில் மின்னும் தொலைபேசி என், உண்மையில் தொலைபேசி எண் அல்ல. அது ஒரு சர்வர். தமிழகம் முழுவதும் எத்தனை ஆயிரம் பேர் ஃபோன் செய்தாலும் அவர்களை வெயிட்டிங் லிஸ்டில் காக்க வைத்து கால் பேலன்சை அபகரித்துவிடும். ( ஒரு அழைப்புக்கு பத்து ரூபாய்) ஒன்றரை மணிநேரம் நடக்கும் இந்த ஏமாற்றுப் போட்டியில் உலகெல்லாம் உள்ள மக்கள், குறிப்பாக தமிழர்களே ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிய வேண்டிய உண்மைகள் சில:

1.
இந்த நிகழ்ச்சியில் வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவர்கள்தான் பொதுமக்கள். பேசுபவர்கள் உண்மையில் ஸ்டுடியோவில் வேலை செய்பவர்கள். பேசுபவரின் செல்போன் நம்பர், ஊர் பெயர் திரையில் காட்டப்படுவது இல்லை. வேண்டுமென்றே தவறான பதிலை சொல்லிக் கொண்டிருப்பதுதான் இவர்கள் பணி.

2.
ஒவ்வொரு நாளும் கடைசியில் ஒரே ஒருவர் மூலமாக (அதுவும் ஸ்டுடியோ ஆள்தான் ) நிகழ்ச்சி முடியும் கடைசி நேரத்தில்தான் சரியான பதில் சொல்லப்படுகிறது.இதிலிருந்தே சேனல்கள் திட்டமிட்டு ஏமாற்றுகின்றன என்பதை அறியலாம்.

3.
கால் வெயிட்டிங்கிற்குப் பதில், நம்பர் பிசி என்று பதில் வந்தால் கூட நமது பேலன்ஸ் தப்பிக்கும். ஆனால், கால் வெயிட்டிங் ஆப்ஷனில் அனைவரின் பணத்தையும் பறிப்பதுதான் இவர்களின் நோக்கம்.

4.
நாம் நினைப்பது போல் இது நேரலை நிகழ்ச்சி அல்ல. இது முன்பே பதிவு செய்யப்பட நிகழ்க்சி. அதாவது பிணத்துக்கு அறுவை சிகிச்சை.
5.
இதை தன்னுடைய சொந்த நிகழ்ச்சியாக தயாரிக்காமல், வேறு ஒரு நிறுவனத்திடம்

இந்த நிகழ்ச்சியை ஒப்படைத்துவிட்டு தப்பித்துக் கொள்கின்றன டி.வி. சேனல்கள்.

இவர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைக்கு நாட்டின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உடந்தை.

இதைப் படித்தபிறகாவது, இம்மாதிரியான நிகழ்ச்சிகளை பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்குத் தெரிந்தவர்களிடம் சொல்லுங்கள். நமது பர்சுகளை வேட்டையாடும் இந்த வேட்டை நாய்களுக்கு வேட்டு வையுங்கள்

Friday, 12 August 2011

முற்றும் துறந்த முனிவர்

ஒரு ஊரில் முற்றும் துறந்த முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்குப் பல சீடர்கள் இருந்தார்கள்.

அவர் தன் சீடர்களுக்குப் பல புத்திமதிகள் கற்பித்தார், முக்கியமாகப் பெண்களை மதிக்க வேண்டும், தவறான எண்ணத்துடன் பழகக் கூடாது, பெண்களைத் தெய்வமாக கருத வேண்டும், மற்றவர்கட்கு உதவ வேண்டும் என்றெல்லாம் பல நல்வழிகளைக் கற்பித்தார். அதன்படியே சீடர்களும் ஒழுக்கமானவர்களாகத் திகழ்ந்தார்கள்.

ஒரு நாள் முனிவர் ஒரு சீடனை அழைத்துக் கொண்டு, ஒரு ஆற்றின் வழியே போய்க் கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பெண் ஆற்றில் விழுந்து விட்டார்.

அந்தப் பெண் "உதவி" "உதவி" எனக் கூக்குரலிட்டபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.

சீடன் துறவியைப் பார்த்தான், துறவி எதுவுமே சொல்லவில்லை, எவ்வித சலனமுமில்லாமல் நடந்து கொண்டிருந்தார்.

சீடன் தாமதிக்கவில்லை, உடனே ஆற்றில் குதித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையிலே போட்டுவிட்டு தொடர்ந்து துறவியுடன் நடந்தான்.

சிறிது தூரம் போனார்கள் துறவி எதுவுமே பேசவில்லை.

பின் துறவி சொன்னார், "என்ன இருந்தாலும் நீ அந்தப் பெண்ணைத் தொட்டுத் தூக்கியது சரியில்லை, எனக்கு அது பிடிக்கவில்லை" என்றார்.

அதற்குச் சீடன் சொன்னான், "குருவே, நீங்கள்தான் ஆபத்தில் மற்றவர்க்கு உதவ வேண்டும் என்று கற்றுத் தந்திருக்கிறீர்கள், நான் அந்தப் பெண்ணைக் காப்பாற்றிக் கரையில் போட்டதோடு சரி எல்லாம் மறந்துவிட்டேன், நீங்கள்தான் இன்னமும் அந்தப் பெண்ணைக் நினைத்துக் கொண்டு வருகிறீர்கள்" என்றான்.

இதைக் கேட்ட துறவி வெட்கித் தலைகுனிந்தார்.

Wednesday, 10 August 2011

நான் ஏன் காதலிக்க கூடாது ?எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள்  என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?


இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ?  என்று  கேள்வி வந்து விழுந்தது .


Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை,  மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா  என்று  அடுத்த கேள்வி .


ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .


ரெண்டும்  சேர்ந்து  ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .


கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும்  சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு  யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .


காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .


ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .


கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன்  இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .


கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று  கேவலமான கேள்வி .


பதில் தெரியாததால்  நான் இது வரை காதலிக்க வில்லை . 


போதுமா , போதுமா ..


இனிமே எவனாவது , மச்சி அப்புறம் உன் ஆளு என்ன  சொல்றா ?
அப்படின்னு  கேட்டீங்க ...!!!@@#$$$


ஏன்டா  இப்படி , ஒருத்தனை அழ வச்சி பார்ப்பதில்  நம்ம தமிழர்கள் தான் பெஸ்ட் ..
அவள் பறந்து போனாளே , என்னை மறந்து போனாளே..

நன்றி : பெயர் தெரியா நண்பர் 

Monday, 8 August 2011

நட்பு

புதிய ஆடை!
முறுக்கு மாலை!
போர்வை போர்த்தி
தர்ம அடி!
சைட் அடிக்கும்
பெண்களின் பெயர்கள்,
பிறந்தநாள் கேக்'கில் என,
கொண்டாடப்பட்ட
நண்பர்களின் பிறந்தநாட்கள்;
இப்போதெல்லாம்
யாஹூ ரிமைண்டர் மெயில்
வந்தால்தான்
நியாபகத்திற்கு
வருகிறது!

முதல் அறிமுகத்திலேயே
மின்னலாய் துளிர்விட்ட
நட்'பூ'...
பூத்து,காய்த்து,
கனிக்கொடுத்து
சுகமான சுமையாய்,
காலமெல்லாம்
களித்திருக்கச் செய்யும்
என்ற நம்பிக்கை ஊற்று,
பு(தை)கைய ஆரம்பித்து
விட்டதற்கு
என்ன காரணம் ?
அளவுக்குமீறிய
எதிர்பார்ப்பா?
காரணமேயில்லாதக்
கோபங்களா?
பிறர் ப(ழி)றித்துவிடுவார்களோ
என்ற பரிதவிப்பா?
நட்பு என்பது
வானவில் அல்ல !
தோன்றி,
களித்து,
கரைந்துபோவதற்கு...
வாழும்வரை
உயிர்மூச்சாக...
பாலைவனப்பாதையில்
தென்றலாக...
எதிர்ப்பவர்களுக்கு
புயலாக...
நட்பு என்பது
காற்றைப்போல !
நம் நட்பு...
வானவில்லா?
தென்றல் காற்றா?

Tuesday, 2 August 2011

இது தமிழல்ல தமிங்கிலம்

தமிழன் தன் தாய்மொழியைப் புகழ்ந்தான் - போற்றினான் - தலையில் வைத்துக் குதித்தான் - காப்பாற்றவில்லை.
சொந்த மொழி அழியப் போகிறதே என்னும் கவலை கொஞ்சமும் இன்றி வந்த
மொழிக்கெல்லாம் தமிழன் வாசல் திறந்தான்.

தமிழ் மொழி தனித்தியங்கும் ஆற்றலுடையது என்பது தெரிந்தும் தமிழன் பிற
மொழிகளை ஏற்றுத் தமிழை அழித்தான்.

“வீட்டுக் கதவைக் கள்ளச் சாவியால் திறந்து பீரோவில் இருந்த துட்டையும்
கோணிப்பையில் இருந்த பப்பாளிப் பழத்தையும் சப்போட்டாப் பழத்தையும்
கொய்யாப் பழத்தையும் திருடிய சுமார் இருபது வயதுடைய கில்லாடி ஆட்டோ
ரிக்சாவில் தப்பி ஓடிய போது தகவல் அறிந்த பொலிஸ் ஏட்டு விரட்டி
துப்பாக்கியால் சுட்டதில் தோட்டாக்கள் அவனைத் தீர்த்துக் கட்டின”.

செய்தி ஏட்டில் ஒரு திருட்டு நிகழ்வைப் படித்து முடித்து அது செந்தமிழ் தான் என நினைக்கிறோம்.

ஆனால்........
தமிழா இது?

‘சாவி’ - போர்த்துக்கீசிய மொழி, ‘பீரோ’ - பிரெஞ்சு மொழி,
‘துட்டு’ - டச்சு மொழி, ‘கோணி’ - இந்தி மொழி, ‘பப்பாளி’ - மலாய் மொழி,
‘சப்போட்டா’ - யப்பானிய மொழி, ‘கொய்யா’ - பிரேசிலிய மொழி,
‘சுமார்’ - பெர்சிய மொழி, ‘வயது’ - சமஸ்கிருத மொழி,
‘கில்லாடி’ - மராத்தி மொழி, ‘ஆட்டோ’ - கிரேக்க மொழி,
‘ரிக்சா’ - யப்பானிய மொழி, ‘தகவல்’ - அரபி மொழி,
‘பொலிஸ்’ - இலத்தீன் மொழி, ‘ஏட்டு’ - ஆங்கில மொழி, ‘துப்பாக்கி’ -
துருக்கி மொழி, தோட்டா - உருது மொழி.

எந்த மொழியையும் தமிழன் எற்றுக் கொள்வான் என்பதற்கு இதை விடச்
சான்று தேவையில்லை.

இலங்கையிலும் தமிழன் மொழி இழந்து இனம் மாறிப் போனான் என்பதே வரலாறு. இலங்கை என்பது தூய தமிழ்ச்சொல். இலங்குதல் - ஒளி விடுதல்
என்பது தான் வேர்.

சிங்களவன் இன்று ‘லங்கா’ என இலங்கையை அழைக்கிறான். ‘லக்’ என்ற
வட மொழிச் சொல்லில் இருந்தே ‘லங்கா’ வந்தது என்கிறான் சிங்கள ஆய்வாளன்.

ஆனால்,

காலம் காலமாய்ச் சிங்களவர்களின் பெயர்களிலே ‘இலங்கை’ என்ற தூய தமிழ்ச் சொல் ஒட்டிக் கொண்டிருப்பதை எவருமே சுட்டிக் காட்டுவதில்லை.

இலங்கை ரத்னா, இலங்கை கோன் என்று சிங்களவர் பெயர்கள் உண்டே தவிர- லக்ரத்னா, லக்கோன் என்றோ சிங்களவர் பெயர்கள் உண்டா?

பைந்தமிழ் ஈழத்தில் - மீன் பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் இற்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வந்து குடியமர்ந்த போர்த்துக்கீசர்க்ள் இன்றும் வீடுகளில் தங்கள் தாய்மொழியாம் போர்த்துக்கீச மொழியிலேயே உரையாடுகிறார்கள்.

ஆனால்,

150 ஆண்டுகளுக்கு முன்பு மொரீசியஸ் தீவுக்குப் போன தமிழர்கள் தாய் மொழியாம் தமிழை முற்றிலுமாக மறந்து கிரியோல் மொழிக்காரர்களாய் ஆங்கில மொழிக்காரர்களாய் மாறிப் போனார்கள்.

காலையில் மகனைப் பார்த்து ‘பல்லை Brush பண்ணு’ என்கிறான். பின்பு ‘Body wash பண்ணு’ எங்கிறான். அப்புறம் ‘Tiffin பண்ணு’ என்கிறான். பிறகு ‘Dress பண்ணு’ என்கிறான். பின்பு ‘Ready பண்ணு’ என்கிறான். பின்பு பெரியவரை ‘Meet பண்ணு’ என்கிறான். பிறகு ‘அங்கேயே stay பண்ணிடாதப்பா - Return பண்ணிடு’ என்கிறான்.

இவர்கள் வாயில் பண்ணுதல் என்ற தமிழ்ச்சொல்லை விட்டால் தமிழ் இல்லை.

கடைத்தெருவில் இறங்கினால் ‘ லாண்டரி’, ‘ஏர் கட்டிங் சலூன்’, ‘ஓட்டல்’, ‘எலக்டிரிக்கல்ஸ்’, ‘டைலர்ஸ்’, ‘கம்பனி’, ‘டெக்ஸ்டைல்ஸ்’, இப்படி

நாளேடுகள் வார இதழ்கள் வாங்கப் போனால் ‘ஜுனியர் போஸ்ட்’, ‘இந்தியா ருடே’, ‘ரிப்போட்டர்’, ‘ஹெல்த்’ இப்படி

துணி வாங்கப் போனால் ‘பாண்ட்’, ‘சர்ட்’, ‘ஜீன்ஸ்’, ‘சாறி’, ‘ஜாக்கட்’ இப்படி

அலுவலகத்தில் நுழைந்தால் ‘டைரக்டர்’, ‘கிளார்க்’, ‘பியூன்’, ‘லாக்கர்’, ‘டிராயர்’, ‘பைல்’ ,

பள்ளிக்க்கூடம் போனால் ‘பிரின்சிபால்’, ‘டீச்சர்’, ‘ஸ்டூடன்ஸ்’, ‘கிளாஸ்’, ‘டெஸ்டு’, ‘றிசல்டு’, ‘பாஸ்’, ‘பெயில்’,

ஏதேனும் தொழில் பார்ப்போம் என்றால் ‘அப்பிளிக்கேசன்’, ‘இன்டர்வியூ’, ‘செலக்சன்’, ‘அப்பாயிண்ட்மெண்ட்’, ப்ரோமோசன்’,

விளையாடப் போனால் ‘கிரிக்கெட்’, ‘புட்பால்’, ‘டெனிஸ்’, ‘ஹாக்கி’, ‘செஸ்’,

நோய் வந்தால் ‘ஹாஸ்பிடல்’, ‘டாக்டர்’, ‘நர்ஸ்’, ‘சிஸ்டர்’, ‘ஆப்ரேசன்’ இப்படி

திரையுலகில் நுழைந்தால் ‘சூட்டிங்’, ‘அவுட்டோர்’, ‘இண்டோர்’, ‘கால்சீட்’, ‘மேக்கப்’, கட் கட் கட் இப்படி

முத்தமிழ் விழா மேடையில் கூட முதலில் முழங்குவது
‘மைக் டெஸ்டிங் ஒன் டூ திரீ!’

தமிழ்நாட்டு வீடுகளில் வெள்ளைக்காரனா திருட வருகிறான்? திருடனை மிரட்ட வீட்டு வாசலில் ‘Beware of Dogs’ என்று ஆங்கிலத்தில் எழுதி வைக்கிறான் தமிழன்.

எங்கிருந்தோ வந்த ஆங்கில மொழியில் ஒவ்வொரு குப்பைத் தொட்டியிலும்
‘Use Me’ என்று எழுதப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் குப்பைத் தொட்டி கூட இன்று ஆங்கிலம் பேசும் தலைக்குனிவை யாரிடம் சொல்லி அழுவது.....?

இப்படி நாம் 85% க்கும் அதிகமாக ஆங்கிலம் கலந்து பேசும் மொழியை தமிழ் என்று அழைக்கலாமா? இது தமிழல்ல தமிங்கிலம். தமிழ்நாட்டில் எங்கும் தமிங்கிலம்........

Monday, 1 August 2011

தந்தை


மறக்கவில்லை நான் எதையும்!

நான் உயரவேண்டும் என்பதற்காக

நீ குனிந்த இடங்கள் தான்

எத்தனையோ!

நான் அவதிப்படாமல் வாழ

நீ உன் கனவுகளைத்

தியாகம் செய்தது தான்

எத்தனையோ!

மாடுதன்

ரத்ததைப் பாலாய்க் கொடுக்கிறது

நீ

உன் ரத்தத்தையும்,

வியர்வையும் கலந்து

எனக்கு

வியர்வையற்ற

ஒர் வாழ்க்கையை கொடுத்திருக்கிறாய்

பக்கத்துவீட்டுப்பையனைப் பார்த்து

நம் நிலையரியாமல் நான் விரும்ப

உன் சக்திக்குமீறி வாங்கினாய்

எனக்கு ஒரு சைக்கிள்

எதிர் வீட்டில் சென்று நான்

ஒளியும் ஓலியும் பார்த்ததால்

உன் வரவுக்கு மீறி வாங்கினாய்

ஒரு வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி

நான் படித்த பட்டம்

நான் இன்று இருக்கும் பதவி

எதுவும் எனதில்லை

நீ

என்னைப்பற்றி அன்று

கனவுகளின்றி இருந்திருந்தால்!!

உன் கோபம் எரிமலையைப் போன்றது

எதிர்த்து நிற்பவர்களைப் பொசிக்கிவிடும்

அதைக்கண்டு பெருமை அடைந்திருக்கிறேன் பலமுறை;

அநேக நேரம்

உன் கோபம்

நியாயத்தை நிலைநிறுத்த

புறப்பட்ட துப்பாக்கித்தோட்டாக்களே

உன்னைச் சர்வாதிகாரி

என்றே வர்ணிப்பேன்

பள்ளிப்பருவ நண்பர்களிடம்

ஆனால்

நீ திட்டியதும், அடித்ததும்

ஒர் சிற்பி சிலைச்செதுக்க

உளியால் பாறையை அடித்ததற்குச்

சமம் என்று உணர்ந்தேன்

பின்பு!

இமயத்தைப் புரட்டிப்போட!

நீ ஒர் நல்ல தந்தையாய்

வாழ்ந்துகாட்டிவிட்டாய்

நான் ஒர் நல்ல தமயனாய்

இருந்துகாட்ட

எத்தனைக்காலம் தான் ஆகுமோ?